புரோகிராமிங் என்றால் என்ன? தொடர் 7
முந்தைய பாகத்தில் Algorithm என்றால் என்ன என்பதை விரிவாக பார்த்தோம். இனி...
Program என்றால் என்ன?
Computer என்ன செய்யவேண்டும் என்பதை programming language ல் command டுகளாக எழுதுவது program எனப்படும். Program ஐ எழுதி execute செய்வதன் மூலம் நமக்கு தேவையான result டை நாம் பெறுகிறோம்.
Programming building blocks என்றால் என்ன?
எந்தவொரு Programming Language ஐ எடுத்துக்கொண்டாலும் அதில் சில அடிப்படையான விசயங்கள் இருக்கும். நீங்கள் எழுதும் program எதுவாக இருந்தாலும் இந்த அடிப்படைகளை கொண்டுதான் உங்களால் எழுதமுடியும். இதைத்தான் Programming building blocks அல்லது Programming elements என்கிறோம்.