புரோகிராமிங் என்றால் என்ன? தொடர் 12
இத்தொடரின் 7 ஆம் பாகத்திலிருந்து programming building blocks ஐ பற்றி அறிந்து வருகிறோம். அதன் தொடர்ச்சியாக statements களை பற்றி இங்கே பார்க்கப் போகிறோம்.
Assignment Statement
ஒரு value வை ஒரு variable லில் assign செய்யவேண்டும் என்பதைச் சுட்ட இந்த assignment statement பயன்படுகிறது. Assign செய்வது என்பதை store செய்வதென்று கூட சொல்லலாம்.
இதன் மூலம் ஒரு value ஒரு variable லில் store செய்யப்படுகிறது.
இதன் syntax இங்கே தரப்பட்டுள்ளது.