திங்கள், 26 நவம்பர், 2012

4 While loop என்றால் என்ன?

புரோகிராமிங் என்றால் என்ன? தொடர் 19

 
முந்தைய பதிவில் for loop ஐ பற்றி பார்த்தோம் அல்லவா. இந்த பதிவில் while loop  ஐ பற்றி பார்ப்போம்.

ஒரு condition true வாக இருக்கும் வரையில் குறிப்பிட்ட statement களை திரும்பத்திரும்ப execute செய்ய while loop பயன்படுகிறது.

இதையேதான் for loop செய்கிறதே, பின்பு அதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம் என்று கேட்கிறீர்களா? வித்தியாசம் இருக்கிறது. For loop வேலை செய்வதற்கு ஆரம்ப எண்ணும் முடிவு எண்ணும் அவசியம் தேவை. ஆனால் while loop பிற்கு ஆரம்ப எண், முடிவு எண் அவசியமில்லை, தேவையானால் வேறுவகையில் பயன்படுத்திக் கொள்ளலாம்.