செவ்வாய், 4 டிசம்பர், 2012

9 While Loop பில் பல ரகம்

புரோகிராமிங் என்றால் என்ன? தொடர் 20

 
முந்தைய பாகத்தில் while loop பானது ஒரு condition true வாக இருக்கும் வரையில் குறிப்பிட்ட statement களை திரும்பத் திரும்ப execute செய்யும் என்பதை பார்த்தோம் அல்லவா? அதனை சற்று நினைவுபடுத்தி பார்த்துவிட்டு மற்றவைகளை பார்ப்போம்.

WHILE this_boolean_condition_is_true
BEGIN
  execute these statements
  your statements here
END

இது எவ்வாறு வேலை செய்ததென்று பார்த்தோம்?


திங்கள், 26 நவம்பர், 2012

4 While loop என்றால் என்ன?

புரோகிராமிங் என்றால் என்ன? தொடர் 19

 
முந்தைய பதிவில் for loop ஐ பற்றி பார்த்தோம் அல்லவா. இந்த பதிவில் while loop  ஐ பற்றி பார்ப்போம்.

ஒரு condition true வாக இருக்கும் வரையில் குறிப்பிட்ட statement களை திரும்பத்திரும்ப execute செய்ய while loop பயன்படுகிறது.

இதையேதான் for loop செய்கிறதே, பின்பு அதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம் என்று கேட்கிறீர்களா? வித்தியாசம் இருக்கிறது. For loop வேலை செய்வதற்கு ஆரம்ப எண்ணும் முடிவு எண்ணும் அவசியம் தேவை. ஆனால் while loop பிற்கு ஆரம்ப எண், முடிவு எண் அவசியமில்லை, தேவையானால் வேறுவகையில் பயன்படுத்திக் கொள்ளலாம்.


வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012

7 Nested Loops என்றால் என்ன?

புரோகிராமிங் என்றால் என்ன? தொடர் 18

 
முந்தைய பாகத்தில் for loop என்றால் என்னவென்பதை பார்த்தோம். இனி nested for loop ஐ பற்றி பார்ப்போம்.

Nested என்பதை அடுக்குகள் என்று புரிந்துகொள்ளலாம். அதாவது ஒரு for loop பின் உள்ளே இன்னொரு for loop இருப்பதுதான் nested for loop ஆகும்.

இது எதற்காக பயன்படுகிறது என்பதை ஒரு உதாரணத்துடன் பார்ப்போம், நெல் அறுவடை முடிந்ததும் கூலி கொடுக்கவேண்டும். தொழிலாளர்கள் கூலியாக பணத்தை வாங்காமல் நெல்லைத்தான் கேட்பார்கள். ஒருவருக்கு பத்து மரக்கால் நெல் கூலியாக கொடுக்க முடிவாகிவிட்டது.புதன், 15 ஆகஸ்ட், 2012

2 For Loop எதற்கு பயன்படுகிறது?

புரோகிராமிங் என்றால் என்ன? தொடர் 17

 
Loop என்றால் என்ன என்பதைப் பற்றியும் அது எவ்வாறு வேலை செய்கிறது என்பதைப் பற்றியும் முந்தைய பாகத்தில் பார்த்தோம்.

Loop என்றதும் அனைவருக்கும் நினைவில் வருவது For Loop தான். எனவே For loop ஐ பற்றியும் அது எப்படி வேலை செய்கிறது என்பதைப் பற்றியும் இங்கு பார்ப்போம்.

நமது program மில் இடம்பெறும் ஒரு சில statement களை குறிப்பிட்ட எண்ணிக்கையில் திரும்பத்திரும்ப execute செய்ய for loop பயன்படுகிறது.ஞாயிறு, 15 ஜூலை, 2012

2 Looping Statements என்றால் என்ன?

புரோகிராமிங் என்றால் என்ன? தொடர் 16

 
இத்தொடரின் 7 ஆம் பாகத்திலிருந்து programming building blocks ஐ பற்றி அறிந்து வருகிறோம் அல்லவா? அதன் தொடர்ச்சியாக looping statements களை பற்றி இங்கே பார்க்கப் போகிறோம்.

நாம் எழுதும் program மில் இடம்பெறும் statement களில் சிலவற்றை திரும்பத் திரும்ப execute செய்ய நமக்கு உதவுபவை looping statement கள் ஆகும்.

FOR LOOP மற்றும் WHILE LOOPஆகியவை looping statement கள் ஆகும்.

Loop statement டின் பயன்பாடு என்ன?

நல்ல கேள்வி. இந்த கேள்விக்கு நான் பதிலளிப்பதற்கு முன்பாக, நான் கேட்கும் சில கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லுங்களேன்.சனி, 7 ஜூலை, 2012

3 Nested If என்றால் என்ன?

புரோகிராமிங் என்றால் என்ன? தொடர் 15

 
If condition ஐ பயன்படுத்தி எவ்வாறு program எழுதுவது, எந்த சூழ்நிலையில் அதை பயன்படுத்துவது என்பதை தொடர்ந்து பார்த்து வருகிறோம். வெறுமனே if ஐ மனப்பாடம் செய்யாமல், யதார்த்தமாக கற்றுக்கொள்ள டாக்டர் கம்பவுண்டர் உதாரணத்தை பயன்படுத்தி வருகிறோம். இதன் நோக்கம், தினமும் பல சூழ்நிலைகளில் தக்க முடிவெடுத்து அதற்கேற்ப காரியங்களை செய்கிறோம் என்பதை நீங்கள் உணரவேண்டும். இவ்வாறு நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் if condition ஐ பயன்படுத்தியே எடுக்கப்படுவதால் அதை எளிதாக program மாக மாற்றிவிடலாம். இதற்காகத்தான் நாம் ஒவ்வொரு stage லும் கம்பவுண்டரின் முடிவுகளை அதற்கு பொருத்தமான if ஐ  போட்டு எழுதிப்பழகி வருகிறோம்.

ஏம்ப்பா! ஏற்கனவே ஒரு நோயாளி உள்ளே இருக்காருல்ல. இவர் இருக்கும் போது ஏன் இன்னொருத்தர உள்ளே அனுப்பினேன்னு டாக்டர் கேட்டதையும், இனிமேல் இந்த தப்பு நடக்காதுன்னு கம்பவுண்டர் சொன்னதையும் முந்தைய பாகத்தில் பார்த்தோம்.

இனி...திங்கள், 2 ஜூலை, 2012

0 பலவகை If statement கள்

புரோகிராமிங் என்றால் என்ன? தொடர் 14


Simple If then statement ஐயும் அதன் பயன்பாட்டையும் முந்தைய பாகத்தில் பார்த்தோம். டாக்டர் இல்லாவிட்டால் என்ன செய்யவேண்டும் என்ற logic நம்ம கம்பவுண்டரிடம் முந்தைய stage ல் இல்லை என்பதை பார்த்தோம். இவருடைய செயலை நாம் புரோகிராமாக மாற்றி வருகிறோம்.அதாவது stage 1 ல் நாம் எழுதிய program மில் டாக்டர் இல்லாவிட்டால் என்ன செய்யவேண்டும் என்ற logic இல்லை. அதனால் நம்ம புரோகிராமும் முழுமையானதாக இல்லை.

இதனால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன? கம்பவுண்டரை பற்றி டாக்டருக்கும் நோயாளிகளுக்கும் ஒரு நல்ல அபிப்ராயம் ஏற்படாது. இது நம்ம program முக்கும் பொருந்தும். எனவேதான் அவரை யோசிக்க சொல்லியிருந்தோம். என்ன சொல்லப்போகிறார் என்பதை இனி காண்போம்.ஞாயிறு, 1 ஜூலை, 2012

1 Conditional statement என்றால் என்ன?

புரோகிராமிங் என்றால் என்ன? தொடர் 13


நிஜவாழ்வில் முடிவெடுத்து சில காரியங்களை நாம் செய்வது போல, நமது program மிலும் முடிவுக்கு தக்கமாதிரி சில காரியங்களை செயல்படுத்த உதவுபவைதான் conditional statements என்பதை முந்தைய பாகத்தில் பார்த்தோம். இனி Conditional statement ல் முதன்மையானதாக இருக்கும் if பற்றி இங்கு பார்ப்போம்.

if statement

if condition, இதை நாம் அன்றாடம் உபயோகித்து வருகிறோம். எந்த சூழ்நிலையில் உபயோகிக்கிறோம் என்பதை உணராததால்தான் நமது program மில் எங்கே பயன்படுத்துவது என்ற குழப்பம் ஏற்படுகிறது. அதை நிவர்த்தி செய்யும்வண்ணம் if பயன்படும் சூழ்நிலைகளை இங்கே பார்ப்போம்.  சனி, 30 ஜூன், 2012

5 Statement களில் எத்தனை வகைகள் உள்ளன?

புரோகிராமிங் என்றால் என்ன? தொடர் 12


இத்தொடரின் 7 ஆம் பாகத்திலிருந்து  programming building blocks ஐ பற்றி அறிந்து வருகிறோம். அதன் தொடர்ச்சியாக statements களை பற்றி இங்கே பார்க்கப் போகிறோம்.

Assignment Statement

ஒரு value வை ஒரு variable லில் assign செய்யவேண்டும் என்பதைச் சுட்ட இந்த assignment statement பயன்படுகிறது. Assign செய்வது என்பதை store செய்வதென்று கூட சொல்லலாம்.

இதன் மூலம் ஒரு value ஒரு variable லில் store செய்யப்படுகிறது.

இதன் syntax  இங்கே தரப்பட்டுள்ளது.ஞாயிறு, 17 ஜூன், 2012

1 Comments ஏன் எழுத வேண்டும்?

புரோகிராமிங் என்றால் என்ன? தொடர் 11

 
நம்முடைய PROGRAM ஐ ஒருவருக்கு புரியவைக்க நமக்கு கிடைத்திருக்கும் ஒரு அருமையான வாய்ப்பு COMMENTS எழுதுவது. அது என்னவென்று இங்கே பார்ப்போம். 

//WE ARE GOING TO LEARN THE IMPORTANCE OF COMMENTS
இங்கே 
// என்கின்ற SYMBOL ளுக்கு அடுத்து இருப்பவை COMMENTS ஆகும்

நாம் எழுதும் program மில் இடம்பெறும் குறிப்புகளைத்தான் comments என்கிறோம். இந்த குறிப்புகளை compiler கண்டுகொள்ளாது. எனவே இது நமது program size ஸையோ அல்லது performance ஸையோ பாதிக்காது. திங்கள், 4 ஜூன், 2012

0 Expression, Operator precedence என்றால் என்ன?

புரோகிராமிங் என்றால் என்ன? தொடர் 10


நாம் எழுதுகின்ற program மில் expression என்பது இன்றியமையாதது ஆகும். எனவே அதைப்பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.

Expression என்றால் என்ன? What is an expression in computer programming?

An expression is a combination of values, constants, variables, operators, and functions, which are constructed according to the syntax of the language, which are interpreted according to the particular rules of precedence, that evaluates to a single value.

அதாவது values, constants, variables, operators மற்றும் functions களைக் கொண்டு எழுதப்படுவதை Expression என்று சொல்லலாம்.

நாம் எந்த programming language ல் program எழுதுகிறோமோ அந்த language புரிந்து கொள்வது மாதிரி நமது expression அமையவேண்டும்.செவ்வாய், 22 மே, 2012

7 Operator, Operand என்றால் என்ன?

புரோகிராமிங் என்றால் என்ன? தொடர் 9


ஒரு PROGRAM எழுதுவதற்கு முன் என்னென்ன அடிப்படை விசயங்களை (PROGRAMMING BUILDING BLOCKS) நாம் அவசியம் தெரிந்திருக்கவேண்டும் என்பதை கடந்த இரண்டு பாகங்களில் பார்த்து வருகிறோம். அதன் தொடர்ச்சியாக அடுத்து OPERATOR என்றால் என்னெவென்று பார்ப்போம்.

OPERATOR:

OPERATOR என்பது ஒரு செயலை குறிக்கும் SYMBOL ஆகும். An operator is a symbol that represents an action.

உதாரணத்திற்கு + என்கிற SYMBOL இரு எண்களை கூட்டுவதற்கு பயன்படுகிறது அல்லவா? எனவே...

+ என்பது OPERATOR; கூட்டல் என்பது அதன் செயல் (ACTION).புதன், 16 மே, 2012

4 Data Types, Variables, Identifiers, Constants என்றால் என்ன?

புரோகிராமிங் என்றால் என்ன? தொடர் 8


முந்தைய பாகத்தில் VARIABLE என்றால் என்ன என்று பார்த்தோம். VARIABLE ஐ பற்றி இன்னும் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாமே...

உங்களிடம் நான் இரண்டு எண்களை மனதில் நினைத்துக்கொள்ள சொல்கிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள். நீங்களும் 10, 20 என்று மூளையில் பதிய வைத்துக்கொள்கிறீர்கள்.

அடுத்து 5 ஐ கூட்டச்சொல்கிறேன். உடனே நீங்கள் எதனுடன் கூட்டச்சொல்கிறீர்கள் என்று கேட்பீர்கள்... சரியா?

நான் முதல் எண்ணுடன் என்று சொன்னால் விடையை எப்படி சொல்வீர்கள்?புதன், 25 ஏப்ரல், 2012

0 Programming building blocks என்றால் என்ன?

புரோகிராமிங் என்றால் என்ன? தொடர் 7


முந்தைய பாகத்தில்  Algorithm என்றால் என்ன என்பதை விரிவாக பார்த்தோம். இனி...

Program என்றால் என்ன?

Computer என்ன செய்யவேண்டும் என்பதை programming language ல் command டுகளாக எழுதுவது  program எனப்படும். Program ஐ எழுதி execute செய்வதன் மூலம் நமக்கு தேவையான result டை நாம் பெறுகிறோம்.

Programming building blocks என்றால் என்ன?

எந்தவொரு Programming Language ஐ எடுத்துக்கொண்டாலும் அதில் சில அடிப்படையான விசயங்கள் இருக்கும். நீங்கள் எழுதும் program எதுவாக இருந்தாலும் இந்த அடிப்படைகளை கொண்டுதான் உங்களால் எழுதமுடியும். இதைத்தான் Programming building blocks அல்லது Programming elements என்கிறோம்.


செவ்வாய், 17 ஏப்ரல், 2012

5 Algorithm, Pseudo code, Flowchart என்றால் என்ன?

புரோகிராமிங் என்றால் என்ன? தொடர் 6


Algorithm (அல்காரிதம்) என்றால் என்ன?

ஒரு Problem முக்கு நாம் எப்படி Solution கொடுக்கப் போகிறோம் என்கிற விவரத்தை step by step களாக எழுதுவதையே Algorithm என்கிறோம். எனவே நாம் எழுதும் step கள் அனைத்தும் ஒழுங்கான order ல் தெளிவாக இருக்க வேண்டும். அதாவது logic சரியாக இருக்கவேண்டும்.

Algorithm மானது Sequence, Selection, and Repetition என்கிற method களில் எழுதப்படுகிறது. அவை ஒவ்வொன்றையும் இங்கே நாம் பார்ப்போம்.

1. Sequential Control Algorithm

Sequential Control Algorith தத்தில் எழுதப்பட்ட step கள் அனைத்தும் எழுதப்பட்ட வரிசையில் execute செய்யப்படும். அதாவது அனைத்து step களும் ஒரேயொரு முறை execute செய்யப்படும்.


செவ்வாய், 10 ஏப்ரல், 2012

1 Software engineering method என்றால் என்ன?

புரோகிராமிங் என்றால் என்ன? தொடர் 5


ஒரு வேலையை முடிப்பதற்காக, நமது மூளையானது செய்யவேண்டிய செயல்களை எந்த வரிசைப்படி செய்தால் என்னென்ன result கிடைக்கும் என்பதை பரிசோதித்து, நிறைய plan கள் போட்டு அதிலிருந்து சிறந்த பிளானை தேர்வுசெய்து நமக்கு கட்டளைகளை வரிசைக்கிரமமாக தந்துகொண்டிருக்கிறது என்பதையும் அதுதான் Software engineering method for problem solving என்பதற்கு அடிப்படை என்பதையும் முந்தைய பாகத்தில்  பார்த்தோம். இனி...

Software engineering method என்றால் என்ன? 

நமக்கு தரப்பட்ட problem or requirement ற்கு ஏற்ப program எழுதுவதற்காக நாம் கையாளும் பல்வேறு technique க்குகளை software engineering method for problem solving எனலாம். இந்த method ல் ஐந்து கட்டங்கள் உள்ளன. இவற்றை நாம் பின்பற்றினால் நம்மால் தரமான program ஐ கொடுக்க முடியும்.


திங்கள், 9 ஏப்ரல், 2012

5 புரோகிராம் எழுதுவது எப்படி?

புரோகிராமிங் என்றால் என்ன? தொடர் 4


Program எழுதுவதற்கு Logic எவ்வளவு முக்கியம் என்பது பற்றியும், அதை எப்படி வளர்த்துக் கொள்வது என்பது பற்றியும் முந்தைய பாகத்தில் பார்த்தோம். இனி Program ஐ எப்படி எழுதுவது என்பதைப் பார்ப்பபோம்.

புரோகிராம் எப்படி எழுதுவது?

Program எழுதுவதற்கு முன் நாம் சில அடிப்படைகளை புரிந்துகொள்ள வேண்டும். அதாவது நமது மனதில் உள்ள எண்ணங்களை computer அறிந்து கொண்டு எந்த வேலையும் செய்யாது. நாம்தான் நமது தேவைகள் என்ன என்பதை command டுகளாக எழுதவேண்டும். நாம் எழுதிய புரோகிராமில் ஏதாவது bug வந்தால் அது கம்ப்யூட்டரின் பிழையில்லை, மாறாக அது நமது logic ல் உள்ள பிழை என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். நாம் ஒரு பிழையான code ஐ எழுதி அதை execute செய்யும் போது கம்ப்யூட்டர் அதை தானாக சரிசெய்து கொள்ளாது. error / crash / hang என்று ஏதேனும் ஒரு வழியில் நமக்கு காட்டிவிடும். அதை எப்படி fix செய்வது என்பதை நாம்தான் யோசிக்கவேண்டும்.


செவ்வாய், 3 ஏப்ரல், 2012

2 புரோகிராமிங் என்றால் என்ன? தொடர் 3

நான் ஒரு புரோகிராமர் அல்லது புரோகிராமர் ஆக ஆசைப்படுகிறேன். ஆனால் லாஜிக்கில் நான் பலவீனமாக இருக்கிறேன், புதிய புதிய ஐடியா எல்லாம் அவ்வளவாக வரமாட்டேங்குது. என்னுடைய கிரியேட்டிவிட்டியை எப்படி நான் வளர்த்துக்கொள்வது என்ற உங்களின் கேள்விக்கான பதிலை இங்கே பார்ப்போம்.

லாஜிக் / ஐடியா / புதுப்புது டெக்னிக்ஸ் / சிந்திக்கும் திறனை வளர்த்துக்கொள்வது எப்படி?
  
முதலில் முயற்சி / ஈடுபாடு / கவனம் / பொறுமை தேவை. எந்த ஒரு காரியமானாலும் கவனத்துடனும் ஈடுபாட்டுடனும் (ஏனோதானோவென்று இல்லாமல்) செய்தால்தான் அதற்குரிய பலன் கிடைக்கும். புரோகிராமிங்கின் அடிப்படை தேவையான லாஜிக்குகளை உருவாக்குவதற்கு பொறுமை ரொம்ப அவசியம். அதுவும் ஆரம்ப கட்டத்தில் இருக்கும் உங்களால் அவசரப்பட்டோ, பாட்டு கேட்டுக்கொண்டோ, டிவி பார்த்துக்கொண்டோ, டென்ஷனான மனநிலையிலோ லாஜிக்குகளை உருவாக்க முடியாது. அத்தா படிக்க சொல்கிறாரே அடுத்த வார பரிட்சைக்கு தயாராகணுமே என்ற டென்ஷனில் உங்களால் அமைதியாக யோசிக்க முடியாது.


செவ்வாய், 27 மார்ச், 2012

5 புரோகிராமிங் என்றால் என்ன? தொடர் 2

Programming language ல் உள்ள கமாண்டுகளை தெரிந்து கொண்டு கொடுக்கப்பட்ட பிரச்சனைகளை - கேள்விகளை உள்வாங்கி அதற்கு எப்படி தீர்வு காணவேண்டும் என்ற லாஜிக் உங்களுக்கு இருந்தால் நீங்கள் ஒரு புரோகிராமர் ஆகிவிடலாம் என்பதை முந்தைய பாகத்தில் பார்த்தோம்.

அதாவது கமாண்டுகள் என்னென்ன என்பது தெரிந்திருந்து நமது தேவைக்கு தகுந்தவாறு நாம் எதிர்பார்க்கும் ரிசல்ட் கிடைக்க எந்த வரிசையில் அவற்றை எழுதவேண்டும் என்கிற லாஜிக் இருந்தால் நம்மால் புரோகிராமர் ஆகிவிட முடியும்.

Command டுகளை நாம் மனனம் செய்து கொள்வது சுலபம், ஏனென்றால் அவை மாறாது, எண்ணிக்கையிலும் குறைவு. ஆனால் Logic ஐ மனப்பாடம் செய்யவே கூடாது, ஏனென்றால் logic நமது தேவைக்கு தகுந்தவாறு நேரத்திற்கு தகுந்தவாறு மாறிக்கொண்டே இருக்கும். அது சிந்திப்பதனால் நமக்கு கிடைப்பது. சிந்திக்கும் திறன் இறைவன் மனிதனுக்கு வழங்கிய அருட்கொடைகளில் ஒன்று.


திங்கள், 26 மார்ச், 2012

11 புரோகிராமிங் என்றால் என்ன? தொடர் 1

புரோகிராமிங் என்பது கணிணி என்ன செய்யவேண்டும் என்பதை குறிப்புகளாக programming language ல் அதற்கு புரிகிற மாதிரி எழுதி நமக்கு தேவையான ரிசல்டை பெறும் ஒரு கலை.

புரோகிராம் கற்றுக்கொள்ள நாம் படிக்கும் புத்தகங்களும் இணையதளங்களில் கிடைக்கும் விவரங்களும் புரிந்துகொள்ள கடினமாக இருப்பது போல தோன்றினாலும், புரோகிராம் எழுதுவது ஒன்றும் அத்தனை கடினமானதன்று.

Programming language ல் உள்ள கமாண்டுகளை தெரிந்து கொண்டு கொடுக்கப்பட்ட பிரச்சினைகளை - கேள்விகளை உள்வாங்கி அதற்கு எப்படி தீர்வு காணவேண்டும் என்ற லாஜிக் உங்களுக்கு இருந்தால் நீங்கள் ஒரு புரோகிராமர் ஆகிவிடலாம்.