புரோகிராமிங் என்பது கணிணி என்ன செய்யவேண்டும் என்பதை குறிப்புகளாக programming language ல் அதற்கு புரிகிற மாதிரி எழுதி நமக்கு தேவையான ரிசல்டை பெறும் ஒரு கலை.
புரோகிராம் கற்றுக்கொள்ள நாம் படிக்கும் புத்தகங்களும் இணையதளங்களில் கிடைக்கும் விவரங்களும் புரிந்துகொள்ள கடினமாக இருப்பது போல தோன்றினாலும், புரோகிராம் எழுதுவது ஒன்றும் அத்தனை கடினமானதன்று.
Programming language ல் உள்ள கமாண்டுகளை தெரிந்து கொண்டு கொடுக்கப்பட்ட பிரச்சினைகளை - கேள்விகளை உள்வாங்கி அதற்கு எப்படி தீர்வு காணவேண்டும் என்ற லாஜிக் உங்களுக்கு இருந்தால் நீங்கள் ஒரு புரோகிராமர் ஆகிவிடலாம்.
ரொம்ப சிம்பிள். எல்லோரிடமும் (logic) லாஜிக் இருக்கிறது. ஆனால் அதை உணர்ந்துவிட்டவர் புரோகிராமர் ஆகிவிடுகிறார். உணராதவர் புரோகிராமர் ஆகமுடிவதில்லை.
லாஜிக் (Logic) என்றால் என்ன?
ஒரு விசயம் சம்பந்தமாக நமக்கு உள்ள ஐடியா மற்றும் கற்பனை வளத்தை தக்க காரண காரியம் மற்றும் விவாதம் மூலம் நிறுவுதலை லாஜிக் (Logic) எனலாம்.
ஒரு விசயம் சம்பந்தமாக நமக்கு உள்ள ஐடியா மற்றும் கற்பனை வளத்தை தக்க காரண காரியம் மற்றும் விவாதம் மூலம் நிறுவுதலை லாஜிக் (Logic) எனலாம்.
கடைக்கு போய் அரிசி வாங்கிட்டு வர அம்மா சொல்றாங்க. இதுதான் உங்கள் முன்பு உள்ள கோரிக்கை அல்லது பிரச்சினை. இதற்கு தீர்வு சொல்வதுதான் லாஜிக்.
கோரிக்கை உங்களுக்கு எட்டியவுடன் உங்களுக்கு என்னென்ன தீர்வுகள் மனதில் ஏற்படுகிறது என்பதை ஒரு பேப்பரில் குறித்துகொண்டே வாருங்களேன். ஆச்சரியப்படுவீர்கள்...
எனக்கு ஏற்படும் எண்ணங்களும் உங்களுக்கு ஏற்படும் எண்ணங்களும் அதை அணுகும் விதங்களும் மாறுபடலாம். ஏனென்றால் ஒவ்வொருவரும் தங்கள் கற்பனா சக்திக்கேற்ப ஒவ்வொரு விசயத்தையும் அணுகுவார்கள். ஆனால் முடிவு ஒன்றாகத்தான் இருக்கும் (அரிசி வாங்கி வர வேண்டும்) என்ன புரிகிறதா?
நமக்கு ஏற்படும் முதல் கேள்வி
A1. என்ன அரிசி வாங்க வேண்டும். கேள்வி கேட்பீர்கள். உங்கள் அம்மா பொன்னி அரிசி என்பார்கள்.
அடுத்து
A2. எத்தனை கிலோ வேண்டும். கேட்பீர்கள். 5 கிலோ வேண்டும் என்பார்கள்.
அடுத்து
A3. பொன்னி அரிசி இல்லையென்றால் என்ன வேண்டும். கேட்பீர்கள். வேறு எதையும் வாங்கிட்டு வராதே என்பார்கள்.
அடுத்து
A4. எந்த கடையில் வாங்கிவரவேண்டும். கேட்பீர்கள். அமுதம் கடையில் வாங்கி வா என்பார்கள்.
அடுத்து
A5. அந்த கடையில் இல்லைன்னா? கேட்பீர்கள். டவுனுக்கு போய் அரிசி மார்க்கெட்ல வாங்கிட்டு வா என்பார்கள்.
அடுத்து
A6. பைக் எடுத்துட்டு போகவா? கேட்பீர்கள். இல்லை சைக்கிள் எடுத்துட்டு போ என்பார்கள்.
அடுத்து
A7. தேவையான காசு வாங்கிக் கொண்டு போவீர்கள்.
உங்களுக்கு தேவையான முழு விவரமும் கிடைத்துவிட்டதாக நீங்கள் உணர்ந்தீர்களானால் உங்களால் நல்லவிதமாக போய் அரிசி வாங்கி வர முடியும்.
சிலர் இப்படித்தான் தங்களுக்கு தேவையான அனைத்து பதில்களும் முழுவதுமாக கிடைக்கும் வரை கேள்விகளை கேட்டு ஒருவேலையை அல்லது புரோகிராமை கச்சிதமாக செய்வார்கள்.
கேள்வி கேட்க தெரியாதவர் அல்லது அரைகுறையாக கேள்வி கேட்டு அல்லது குழப்பமான பதிலை பெற்று செல்பவரின் நிலைமையை யோசித்து பாருங்களேன்.
சிலர் இப்படித்தான் கேள்வி கேட்காமல் தெளிவான பதில் இல்லாமல் வேலையை / புரோகிராமை ஆரம்பித்து இடையில் ஒரு பிரச்சினை என்றால் அதற்கு கைவசம் பதில் இல்லாமல் திணறுவார்கள். காரணம் ஒரு செயலை செய்வதற்கு முன்பு என்னென்ன விசயங்களை தெரிந்து கொள்ள வேண்டுமோ அதை தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டாமல் இருந்தது அல்லது தேவையான கேள்விகள் என்னென்ன என்பதையே தெரிந்துகொள்ளாமல் இருந்ததுதான்.
அடுத்து கேள்விகள் கேட்டு சரியான பதிலைப் (requirements) பெற்றுக்கொண்டீர்கள் என்று வைத்துக்கொள்வோம். எப்படி (programming) செயல்படுகிறீர்கள் என்பதை மீண்டும் பேப்பரில் குறித்துகொண்டே வாருங்கள்.
வீட்டை விட்டு வெளியே வருகிறீர்கள்...
ஸலாம்.நல்ல முயற்சி.தொடரட்டும் உங்கள் கல்விப்பணி.
பதிலளிநீக்குஸலாம்,புரோகிராம் பற்றி எல்லோருக்கும் புரியும்படி எழுதுகிறீர்கள் உங்கள் பணி தொடரட்டும்
பதிலளிநீக்குஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி பரகாதஹூ.
பதிலளிநீக்குநல்ல முயற்சி. படகு போல் அல்லாமல் தொடர்ந்து எழுது வீர்கலா ?
அபு ஃபைஜுல்.
இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து எழுத இருக்கிறேன்.
பதிலளிநீக்குDear Fareed
பதிலளிநீக்குExcellent effort, keep it up
Thanks
BR
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.!
பதிலளிநீக்குஜாவா கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது. புத்தகம் வாங்கிவிட்டேன். ஆனால் இன்னும் தொடங்கவில்லை. புத்தகத்தை பார்த்தாலே தலை சுற்றுகிறது. :) :) :)
தங்கள் பதிவுகளை ம்தலில் படித்துவிட்டு ஜாவா கற்றுக் கொள்ள முயற்சிக்கிறேன்.
தங்களின் இந்த சேவைக்கு இறைவன் தக்க கூலியை தருவானாக!
தொடக்கமே மிக எளிமையாய் உள்ளது.
பதிலளிநீக்குOh man, you could do wonders. You are writing in such a way even I could understand. Keep up with your mission.
பதிலளிநீக்குசகோ.அப்துல் பாஸித் மற்றும் சகோ.மாலதி பத்ரி தங்களிருவரின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.
பதிலளிநீக்குபுரோகிராமிங் செய்வதும் எளிதுதான் என்பதை அனைவருக்கும் புரிய வைக்கத்தான் இந்த தளத்தில் எழுதி வருகிறேன்.
விரைவில் ஆய்வகம் என்ற பகுதியில் ஒவ்வொரு புரோகிராமும் எதற்காக எழுதப்பட்டதென்பது விரிவாக விளக்கப்பட இருக்கிறது. தொடர்ந்து படித்து வாருங்கள்...
thodarattum ungal pani
பதிலளிநீக்குஅனைவருக்கும் பார்க்க, படிக்க, கற்கத் தேவையான பதிவுகள். உங்களுடைய செயலி என்றும் தொடர வேண்டும்.நன்றி.
பதிலளிநீக்கு