3 அறிமுகம்

ஏக இறைவனின் திருப்பெயரால்...

"என் இறைவா! எனக்குக் கல்வியை அதிகப்படுத்து" திருக்குர்ஆன் 20:114

அறிமுகம்

புரோகிராமிங் கலையை (Art of Programming) எளிமையான முறையில் கற்றுக்கொடுப்பதற்காக விஸ்டம் லாஜிக்ஸ் துவங்கப்பட்டது. இயல்பாக சிந்தித்து புரோகிராம் எழுதுவதற்கான பல பயிற்சிகள் இங்கே தரப்படுகின்றன. புரோகிராமராக வரவேண்டும் என்று விரும்புவர்கள் இந்த பயிற்சிகளை படித்து புரிந்து கொண்டால் அவர்களால் இயல்பாக லாஜிக்கை உருவாக்கவும் புரோகிராம் எழுதவும் முடியும்.

யாருக்கு பயன்படும்?

இக்கணிணி யுகத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் சம்பந்தப்பட்ட படிப்புகளை படித்து முன்னேற வேணடும் என்ற கனவில் பள்ளி, கல்லூரி, கம்ப்யூட்டர் பயிற்சி நிறுவனங்களில் சேர்ந்து மாணவர்கள் ஆர்வத்துடன் முயற்சி செய்கிறார்கள். ஆனால் புரோகிராமிங் அடிப்படைகளை சரியாக புரிந்து கொள்பவர்களால் மட்டுமே இத்துறையில் வெற்றிபெற முடிகிறது. புரோகிராமிங் அடிப்படைகளை புரிந்துகொள்ள முடியாதவர்கள் வேறு துறைகளுக்கு சென்றுவிடுவதை பார்க்கமுடிகிறது. 

சிலர் புரோகிராம்களை மனப்பாடம் செய்து அதை அப்படியே எழுதுவார்கள். எழுதும்போது ஏதாவது ஒரு வரியை மறந்துவிட்டாலோ அல்லது பிரச்சனை வந்துவிட்டாலோ அடுத்து என்னசெய்வது என்பது தெரியாமல் திணறுவார்கள். இதனால் நல்ல மதிப்பெண்கள் கிடைக்காமல் போவதுடன் வேலை தேடும்போதும் நேர்காணலை எதிர்கொள்ளும் போதும் பதட்டத்துடன் காணப்படுவார்கள்.

சிலர் பெரிதாக எதையும் மனப்பாடம் செய்யமாட்டார்கள்.  ஆனால் பிராக்டிகல் தேர்வுகளில் சிரமமில்லாமல் நல்ல மதிப்பெண் எடுத்துவிடுவார்கள். வேலை தேடும்போதும் நேர்காணலை எதிர்கொள்ளும் போதும் பதட்டமில்லாமல் காணப்படுவார்கள். இவர்களால் மட்டும் எப்படி வெற்றிபெற முடிகிறது? நம்மிடம் இல்லாத ஒன்று அப்படி என்ன இவர்களிடம் இருக்கிறது? என்பன போன்ற கேள்விகளுக்கு விடையளிக்கும் விதமாகவும், புரோகிராமிங் கலையில் வெற்றிபெற தேவையான பயிற்சிகளை வழங்கிடவும் இதை எழுதுகின்றேன்.

புரோகிராம் எழுத ஆர்வம் இருக்கிறது ஆனால் எப்படி எழுதுவது எங்கிருந்து ஆரம்பிப்பது எனத்தெரியவில்லை என்று சொல்பவர்களுக்காகவும் இதை எழுதுகின்றேன். இத்தளத்தின் மூலம் அவர்களின் தேடுதல்களுக்கான சரியான தகவல்கள் கிடைக்கும் என்றும் நம்புகிறேன்.  

வரவிருக்கும் தலைப்புகள்

புரோகிராம் என்றால் என்ன?
லாஜிக்காக யோசிப்பது எப்படி?
சிறிய மற்றும் பெரிய புரோகிராமை டிஸைன் செய்வது எப்படி?
புரோகிராம் எழுதுவது எப்படி?
எழுதிய புரோகிராமை எவ்வாறு டெஸ்ட் செய்வது?
டேட்டா பேஸ், டேபிள்களை எவ்வாறு டிஸைன் செய்வது?

உள்ளிட்ட பல கேள்விகளுக்கான விடைகளை எளிய நடையில் நிறைய உதாரணங்களோடு எழுதவிருக்கிறேன்.

நன்றி

ஆக்கங்கள் குறித்த உங்களது கருத்துக்களை வழங்கிடுமாறும் உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இத்தளத்தை அறிமுகப்படுத்தி வைக்குமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். தங்கள் வருகைக்கு நன்றி.

அன்புடன்
ஜ.முஹம்மது ரியாதுல் பரீத்.


3 கருத்துகள்:

 1. கணினித்துறை மாணவர்களுக்கான வரப்பிரசாதமாக இவ்வலைப்பூவை அமைந்துள்ளதற்கு மிக்க நன்றி.

  பார்த்தவுடனேயே உங்கள் தளம் எனக்கு மிகவும் பிடித்து விட்டது. இதுவரை எழுதிய அத்தனை பதிவுகளும் நிரலாக்கக் கலையைப் (art of programming) பற்றியே இருப்பது கூடுதல் சிறப்பு.

  ஒரு வேண்டுகோள். தொழில்நுட்ப பதிவுகளை (குறிப்பாக புரொகிராமிங் குறித்து) இவ்வலைப்பூவில் தாங்கள் தொடர்ந்து எழுத வேண்டுமென்பதே என் போன்றோரின் அவா. பயனுள்ள இத்தளத்திற்கு எனது வலைப்பூவில் முதல் வேலையாக தொடுப்பு வழங்கியுள்ளேன்.

  பதிலளிநீக்கு
 2. சகோ. ராஜ்குமார் அவர்களுக்கு
  முதலில் தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் இணைப்பு கொடுத்தமைக்கும் என் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

  எனது நோக்கமே புரோகிராமிங் என்ற கலையை மாணவர்களுக்கு எளிய முறையில் புரியவைக்கவேண்டும் என்பதுதான். அந்த வகையில் நான் சரியான திசையில்தான் பயணித்துக்கொண்டிருக்கிறேன் என்பதை தங்களது கருத்தை படித்ததும் புரிகிறது.

  தொடர்ந்து பதிவுகளை படித்து தங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வழங்கிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
 3. It may useful to you brother!

  http://www.google.com/events/gadc2012/

  பதிலளிநீக்கு