புரோகிராமிங் என்றால் என்ன? தொடர் 25
முந்தைய பாகத்தில் Named and Optional Arguments என்றால் என்னவென்று பார்த்தோம் அல்லவா? ஒரு procedure ரையோ அல்லது function னையோ call செய்யும்போது இரண்டு வழிகளில் அவற்றிற்கு நாம் arguments களை அனுப்பலாம். அவை Pass by value மற்றும் Pass by reference எனப்படும். அதைப்பற்றி இந்த பாடத்தில் பார்ப்போம்.
குறுக்கெழுத்துப்போட்டி அச்சிடப்பட்ட தாளை வைத்துக்கொண்டு உங்கள் வீட்டு திண்ணையில் உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள். பதில்களை நிரப்ப ஆயத்தமாகும்போது எதிர்வீட்டு நண்பர் வருகிறார். ஆசையா இருக்குப்பா! நானும் பதில் எழுதறேனே, எனக்கும் கொஞ்சம் கொடேன் என்று கேட்கிறார்.