புதன், 16 மே, 2012

4 Data Types, Variables, Identifiers, Constants என்றால் என்ன?

புரோகிராமிங் என்றால் என்ன? தொடர் 8


முந்தைய பாகத்தில் VARIABLE என்றால் என்ன என்று பார்த்தோம். VARIABLE ஐ பற்றி இன்னும் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாமே...

உங்களிடம் நான் இரண்டு எண்களை மனதில் நினைத்துக்கொள்ள சொல்கிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள். நீங்களும் 10, 20 என்று மூளையில் பதிய வைத்துக்கொள்கிறீர்கள்.

அடுத்து 5 ஐ கூட்டச்சொல்கிறேன். உடனே நீங்கள் எதனுடன் கூட்டச்சொல்கிறீர்கள் என்று கேட்பீர்கள்... சரியா?

நான் முதல் எண்ணுடன் என்று சொன்னால் விடையை எப்படி சொல்வீர்கள்?

15 மற்றும் 20 என்று சொல்வீர்கள்

ஒருவேளை நான் இரண்டாம் எண்ணுடன் 5 ஐ கூட்டுங்கள் என்று சொல்லியிருந்தால் உங்கள் பதில்

10 மற்றும் 25 என்றிருக்கும். சரிதானே?

நீங்கள் எப்படி உங்கள் மூளையில் இருக்கும் VARIABLE ஐ பயன்படுத்தி எண்களை கூட்டினீர்களோ அதைப் போன்றுதான் கம்ப்யூட்டரும் MEMORY யில் உள்ள VARIABLE ஐ பயன்படுத்தி கூட்டி விடை சொல்கிறது.

என்னாது! நான் VARIABLE ஐ பயன்படுத்தினேனா? எங்கே பயன்படுத்தினேன் என்று கேட்கிறீர்கள்? சரிதானே...

வாங்க சொல்கிறேன்... உங்களிடம் நான் இரண்டு எண்களை மனதில் நினைத்துக்கொள்ள சொன்னேனா? நீங்களும் 10, 20 என்று மூளையில் பதிய வைத்துக்கொண்டீர்களா?

அடுத்து 5 ஐ கூட்டச்சொன்னேனா?

உடனே நீங்கள் எதனுடன் கூட்டச்சொல்கிறீர்கள் என்று கேட்டீர்களா? இந்தகேள்வியை கேட்காமல் உங்களால் கூட்ட முடியுமா? முடியாதுதானே? எதனுடன் என்பது எந்த VARIABLE லுடன் என்று அர்த்தம். அதாவது உங்கள் மூளையில் பல VARIABLE கள் பதிவாகியிருக்கின்றன என்பது இதிலிருந்து விளங்குகிறது...

நான் முதல் எண்ணுடன் என்றுதான் சொன்னேன்... உடனே நீங்கள் 10 ஐத்தான் குறிப்பிடுகிறேன் என்று புரிந்து கொண்டீர்கள். அதாவது முதல் எண் என்ற ஒரு VARIABLE ஐ உங்களின் மூளையில் உருவாக்கி அதில் 10 ஐ STORE செய்து வைத்திருந்தீர்கள். முதல் எண் என்ற VARIABLE லில் இருந்த எண்ணுடன் நான் கூட்டச்சொன்ன 5 ஐ கூட்டி முதல் எண் 15 மற்றும் இரண்டாம் எண் 20 என்று சொன்னீர்கள். சரிதானே...

பாருங்கள்... இரண்டாம் எண் மதிப்பு அப்படியே இருக்கிறது மாறவில்லை. ஏனென்றால் இங்கே நீங்கள் இரண்டு VARIABLE ஐ கையாண்டிருக்கிறீர்கள். முதல் எண் என்ற VARIABLE லில் மட்டும் மாற்றம் செய்யப்பட்டு இரண்டாம் எண் என்ற VARIABLE மாற்றமில்லாமல் இருக்கிறது.

ஒருவேளை உங்கள் வயதுடன் 5 ஐ கூட்டுங்கள் என்று சொன்னால் உங்கள் வயது என்ற VARIABLE லுடன் 5 ஐ கூட்டுவீர்கள்..

VARIABLE என்றால் என்ன என்பதும், நமது PROGRAM முக்கு VARIABLE லின் பங்கு எவ்வளவு முக்கியம் என்பதும் இப்பொழுது விளங்கியிருக்கும் என்று நம்புகிறேன்.

DATA TYPE என்றால் என்ன?

நமது PROGRAM மில் உள்ள ஒவ்வொரு VARIABLE லும் எந்த வகையான DATA வை MEMORY யில் வைத்துக்கொள்ளப் போகிறது என்பதை COMPUTER ருக்கு நாம் சொல்லவேண்டும். இதற்குத்தான் DATA TYPE ஐ பயன்படுத்துகிறோம்.

DATA என்பது பல வகையில் குறிப்பிடப்படுகிறது. அதாவது INTEGER, FLOAT, STRING,  BOOLEAN  என்று பல்வேறு வகைகள் இருக்கின்றன. ஒவ்வொன்றிற்கும் தனித்தனியான குணங்கள் இருக்கின்றன.

"ELANDANGUDI" என்கிற DATA வானது STRING TYPE ஐ சேர்ந்தது.
123 என்பது INTEGER TYPE
123.45 என்பது FLOAT TYPE
TRUE என்பது BOOLEAN TYPE

VARIABLE DECLARATION என்றால் என்ன?

ஒரு VARIABLE ஐ நமது PROGRAM மில் பயன்படுத்துவதற்கு முன்பாக அதை நாம் DECLARE செய்தாக வேண்டும். எப்படி?

MYNAME : STRING
MYAGE : INTEGER
MYWEIGHT : FLOAT
SSLCPASSED : BOOLEAN

இங்கே MYNAME என்பது VARIABLE NAME ஆகும். STRING என்பது DATA TYPE ஆகும். அதாவது MYNAME ல் STRING DATA வை STORE செய்யவேண்டியிருப்பதால் இப்படி DECLARE செய்துள்ளோம். இதைப் போலவே மற்ற VARIABLE களும் DECLARE செய்யப்பட்டுள்ளன.

'GOD IS ONE AND ONE ONLY' அல்லது "I LOVE MY COUNTRY" என்பதை STRING என்று குறிப்பிடுகிறோம்.

மேலே நாம் DECLARE செய்துள்ள VARIABLE களில் VALUE வை போடுவோமா?

MYNAME := "FARIDH"
MYAGE := 33
MYWEIGHT := 80.45
MYWEIGHT := 80.55
SSLCPASSED := TRUE

என்று எழுதினால் COMPUTER கொடுக்கப்பட்ட VALUE க்களை அந்தந்த VARIABLE களில் STORE செய்து வைத்துவிடும்.

அடுத்து VARIABLE லில் உள்ள VALUE வை நமது PROGRAM மில் எத்தனை முறைவேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம். மேலே MYWEIGHT என்ற VARIABLE லில் இரண்டு முறை VALUE மாற்றப்பட்டிருக்கிறது. கடைசியாக எந்த VALUE வை நாம் பதிந்தோமோ அதுதான் அந்த VARIABLE லில் இருக்கும்.

நமது PROGRAM முடிந்தவுடன் அனைத்து VARIABLE களும் COMPUTER MEMORY யிலிருந்து அழிக்கப்பட்டுவிடும். அதிலிருந்த VALUE க்களும் அழிக்கப்பட்டுவிடும்.

IDENTIFIER என்றால் என்ன?

IDENTIFIER என்பது ஒரு VALID NAME அல்லது TOKEN ஆகும். நமது PROGRAM மில் ஏதோ ஒன்றை அடையாளப்படுத்த நமக்கு IDENTIFIER தேவைப்படுகிறது. VARIABLE NAME, CONSTANT NAME, FUNCTION NAME முதலியவை IDENTIFIER எனப்படும்.

இதற்கு சில பொதுவான விதிகள் இருக்கின்றன. அவையாவன:
  • ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்ட எழுத்துக்களைக் கொண்டிருக்கலாம்
  • முதல் எழுத்து ALPHABET ஆக இருக்கவேண்டும்
  • எழுத்துக்களுக்கு இடையில் இடைவெளி இருக்கக்கூடாது
  • ALPHABET, NUMBERS AND SPECIAL CHARACTER _  களை கொண்டுள்ளவைகளை மட்டும் தான் COMPUTER ஏற்றுக்கொள்ளும்
  • IDENTIFIER ரில் DUPLICATE இருக்கக்கூடாது
1234 : STRING //INVALID IDENTIFIER... BEGIN WITH NUMBER
MYNAME1234 : STRING //VALID IDENTIFIER
MY NAME : STRING //INVALID SPACE BETWEEN TWO WORDS
MY_NAME : STRING //VALID IDENTIFIER
M : INTEGER //VALID
M : BOOLEAN //INVALID OR DUPLICATE IDENTIFIER. M IS DECLARED ALREADY AS AN INTEGER

CONSTANT என்றால் என்ன?

CONSTANT ல் ஒரே ஒரு முறை மட்டுமே VALUE வை ASSIGN செய்ய முடியும். ஒருமுறை ஒரு VALUE வை ASSIGN செய்துவிட்டால் PROGRAM முடியும் வரை வேறு VALUE வை ASSIGN செய்ய முடியாது. மற்றபடி VARIABLE லுக்கு பொருந்தும் அனைத்து விசயங்களும் இதற்கு பொருந்தும்.

உதாரணம் கணிதத்தில் PI என்றொரு CONSTANT உள்ளது. அதன் மதிப்பு 22/7 அதாவது 3.142857142857143 இது என்றைக்கும் மாறாதது. எனவே இதை CONSTANT எனலாம்.

நமது PROGRAM மில் சிலவேளைகளில் CONSTANT களை உபயோகப்படுத்த நேரிடலாம்.

CONST PI : FLOAT = 3.142857142857143
CONST COMPANYNAME : STRING = "ABC COMPANY"

CONSTANT ல் ஒரே ஒரு முறை மட்டுமே VALUE வை ASSIGN செய்ய முடியும் என்ற நிபந்தனை இருந்தாலும் அதை நீங்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் உங்கள் PROGRAM மில் கையாளமுடியும்.

முந்தைய பாகம்

அடுத்த பாகம்



4 கருத்துகள்:

  1. தங்கள் தொடர்ப்பதிவுகள் அனைத்தும் அருமை ..

    பதிலளிநீக்கு
  2. தங்களின் கருத்து என்னை சந்தோஷமடையச் செய்கிறது. இருந்தாலும் பெருமையனைத்தும் படைத்த இறைவனுக்கே. இன்னும் எவ்வாறெல்லாம் செய்திகளைத் தந்தால் மக்களுக்கு எளிதாக விளங்கும் என்பதை தாங்கள் அறியத்தந்தால் மிக்க நன்றியுடையவனாக இருப்பேன்.

    பதிலளிநீக்கு
  3. சிறப்பாக உள்ளது.. தொடர்ந்து எழுதுங்கள்.... நமக்காக நாமே ..

    பதிலளிநீக்கு